ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மகளிர் மேம்பாடுகளை இரட்டிப்பாக்க  வேண்டும் – அமைச்சர்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 9 – பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி, மகளிர் மேம்பாடுகள்  இரட்டிப்பாக்க வேண்டும் என்று விரும்புகிறார், அதனால் அவர்கள் பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்வதில் பின்தங்கி இருக்க  மாட்டார்கள்  என்கிறார்.

பல பெண்கள் தங்கள் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக வேலையை விட்டு விடுவதா  அல்லது  தொழிலை தொடர்வதா  என்ற குழப்பத்தை எதிர்கொள்கிறார்கள்.

“பல்கலைக்கழகங்களில் ஆண்களை விட பெண்கள் ஆதிக்கம் அதிகம், 81.9 சதவீதம், ஆனால் தொழிலில் ஆண்களுடன் ஒப்பிடுகையில்,  மக்கள் தொகையில் பெண்கள் 56.2 சதவீதம் பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.

நேற்று இரவு சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் 2024 இல் தனது உரையின் போது, “30 முதல் 39 வயதுக்கு உட்பட்ட பெண்கள் குடும்ப பொறுப்புகள் காரணமாக நிரந்தரமாக தங்கள் வேலையை  விட்டு விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று கூறினார்.

இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், துணை பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நொரைனி அகமது மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நான்சி மேலும் கூறுகையில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள், பொருளாதார பாதுகாப்பு வலைகள் இல்லாததால், அரசாங்கத்திடம் இருந்து நிதி உதவி பெறுபவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

மேலும், பெண்களுக்கான அனைத்து பொருளாதார தடைகள் நீக்கப்பட்டால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 20 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று உலக வங்கி இந்த வாரம் தெரிவித்துள்ளது.


Pengarang :