NATIONAL

இணைய மோசடியில் சிக்கிய இல்லத்தரசி ரிம31,700 இழந்தார்

மிரி, மார்ச் 19: கடந்த வாரம் இணைய மோசடியில் சிக்கிய இல்லத்தரசி ரிம31,700 இழந்தார்.

பாதிக்கப்பட்ட 60 வயதான பெண் கடந்த மாதம் முகநூல் பக்கம் மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட பழைய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டிருந்தார் என மிரி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அலெக்சன் நாகா சாபு கூறினார்.

அதன் பின்னர் சந்தேக நபர் கடந்த மார்ச் 15ஆம் திகதி பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.

“சம்பந்தப்பட்ட பொருளை வாங்குவதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய சந்தேக நபர் பாதிக்கப்பட்டவருக்கு இணைப்பை அனுப்பினார்” என்று அலெக்ஸ்சன் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

வாங்கப்பட வேண்டிய பொருளின் விவரங்களை அறியாமல், பாதிக்கப்பட்டவர் தனது இணைய வங்கி பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி பயன்பாட்டில் உள்நுழைய முயன்றார். ஆனால் தோல்வியடைந்ததாக அலெக்ஸன் கூறினார்.

அதன்பிறகு, பாதிக்கப்பட்டவர் வங்கிக் கணக்கிலிருந்த RM31,700 இழந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையில் புகார் அளித்தார் மற்றும் மோசடி செய்ததற்காகக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 402 இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :