ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிறந்த மனித வளத்தை  கொண்ட மாநிலமாக சிலாங்கூர் திகல வேண்டும்

செய்தி. சு.சுப்பையா

பெ.ஜெயா.மார்ச்.23- நாட்டின் மொத்த வருமானத்தில் 25 விழுக்காடு பங்களிப்பை   சிலாங்கூர்  வழங்குகிறது. இதைத் தொடர்ந்து வலுப்படுத்த சிறந்த திறன் கல்வியைச் சிலாங்கூர் மாநிலம் வழங்க வேண்டும் என்று 2 நாள் சிலாங்கூர் மாநில அளவிலான சீருடை மற்றும் திறன் கல்வி கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து உரையாற்றும் போது மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

உலக நாடுகள் மலேசியாவில் முதலீடு செய்து வருகிறது.  நாட்டுச் சந்தைக்கு ஏற்ற மனித வளத்தைத் தயார் செய்ய வேண்டும்.  இத் தொழிற்சாலைகளில் வேலை செய்யத் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் தேவை படுகிறார்கள். இத் தொழிலாளர் திறன் பெற்று இருந்தால் உயர்ந்த ஊதியமும் கிடைக்கும்.

விரைவில் ஜெர்மன் நாட்டுக்கு தொழிற்துறை மேம்பாடு அடைந்த நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். இங்குத் தொழில் கல்வி படிக்க நமது மாணவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு ஏற்றவாறு மலேசியாவில் தொழிற்கல்வியை நமது மாணவர்கள் கற்க வேண்டும்.

திறன் வாய்ந்த கல்வியை நமது மாணவர்கள் பெற்றால் எதிர் காலத்தில் உயர்ந்த ஊதியத்தை நமது மாணவர் பெறுவார்கள். இந்தத் திறன் கல்வி வாய்ப்பை நமது மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

இந்த 2024 ஆம் ஆண்டுக்கான சீருடை மற்றும் திறன் கல்வி கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக உரையாற்றி தொடக்கி வைத்தார். இந்தக் கண்காட்சியை திருப்பு ஊர்தி ( டெரோன் ) மூலம் கொண்டு வரப் பட்ட எழுது கோலைக் கொண்டு ஐ பேட்டில் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் தொடர்ந்து  திறன் கல்வி சேவை வழங்கும் கல்வி நிறுவனங்களின் முகப்பிடச் சேவை மையங்களைப் பார்வையிட்டார். இதே போல் போலீஸ், இராணுவம், சுங்க இலாகா மற்றும் தீயணைப்பு முகப்பிடச் சேவை மையங்களுக்கும் சென்று பார்வையிட்டார்.


Pengarang :