ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சீருடை மற்றும் திறன் கல்வி  2 நாள் கண்காட்சி பெட்டாலிங் ஜெயாவில் தொடங்கியது.

செய்தி ; சு.சுப்பையா

2 நாள் சீருடை மற்றும் திறன் கல்வி கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களுக்கு கண்காட்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் உமாராணி அதிகாரப்பூர்வமான டி சட்டையை வழங்கினார். அருகில் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் மற்றும் பெட்டாலிங் ஜெயா மா நகர் மன்ற டத்தோ பண்டார் ஹாஜி முகை சாஹ்ரி ஆகியோர்.

பெ.ஜெயா.மார்ச்.23-  ஆயிரத்திற்கும் மேற்பட்ட 5ஆம் படிவ மாணவர்களுடன் 2024 ஆம் ஆண்டுக்கான சீருடை மற்றும்  திறன் கல்வி கண்காட்சி தொடங்கியது. இக்கண்காட்சி செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தலைமையில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக உரையாற்றி தொடங்கி வைத்தார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள இடை நிலைப் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். இம்மாணவர்கள் கிள்ளான் பள்ளதாக்கில் உள்ள இடை நிலைப் பள்ளி ஆசிரியர்கள் திரட்டி கொண்டு வந்திருந்தனர். சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்க் கல்வி உயர் அதிகாரி ஆசிரியர் செங்குட்டுவன் வீரனும் கலந்து கொண்டார்.

எஸ்.பி.எம். தேர்வுக்கு மாணவர்கள் உயர்க் கல்வி மேற்கொள்கின்றனர். நாட்டின் எதிர்கால  மனித வளத் துறைக்கு தேவையான கல்விக்கு வழி காட்ட இக்கண்காட்சி நடத்தப் படுகிறது. இன்றைய சூழலில் தொழிற்பேட்டைகளில் திறன் வாய்ந்த உள்நாட்டு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இச்சந்தைக்கு தேவையான ஆற்றல் படைத்த மனித வளம் குறைவாக உள்ளன.

இந்த குறையை தீர்க்க மடானி அரசு  680 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. குறிப்பாக 5 ஆம் படிவத்துக்கு பின்னர் தேவையான தொழிற்கல்வி  வழங்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு துரித மேம்பாடு அடைந்து வருகிறது. இம் மேம்பாட்டுக்கு ஏற்ற வகையில் மனித வளத்துறையும் மேம்படைய வேண்டும். இக்கண்காட்சியில் சிலாங்கூர் மாநிலத்தில் செயல்படும் போலி டெக்னிக் கல்லூரிகள், இளைஞர் விளையாட்டு துறை அமைச்சின் கீழ் செயல்படும் தொழிற்கல்வி கல்லூரிகள், திறன் கல்வி கல்வி கல்லூரிகள் கலந்துக் கொண்டன.

மாநில மற்றும் மடானி அரசின் கீழ் செயல்படும் 35 கல்லூரிகள் தங்களது முகப் பிட சேவையை திறந்துள்ளன. அதில் சீருடை இயக்கமும் அடங்கும். போலீஸ், ராணுவம், சுங்க இலாகா மற்றும் தீயணைப்பு படை யும் அடங்கும்.

நாட்டின் எதிர்கால நலனை முன்வைத்து 5 ஆம் படிவம் படித்த மாணவர்கள் தொழிற்கல்வி படித்து டிப்ளோமா பெற்ற , பின்னர் பட்டப்படிப்பு வரை தங்களது உயர் கல்வியை மேற்கொள்ள வழி காட்டுகிறது இக்கண்காட்சி.

இன்றும் நாளையும், 2 நாட்களுக்கு பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டர் பொது மண்டபத்தில் இக்கண்காட்சி நடைபெறுகிறது. இன்று தொடங்கிய இக்கண்காட்சியில் கணிசமான அளவில் இந்திய மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்காக ஏற்பாட்டுக் குழுவினரோடு இடைநிலைப் பள்ளிகளில் கவுன்சிலர் ஆசிரியர்களும் கடுமையாக பாடு பட்டனர் என்று சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உயர் அதிகாரியான ஆசிரியர் செங்குட்வன் வீரன் தெரிவித்தார்.

இந்த 2 நாள் சீருடை, திறன் கல்வி கண்காட்சிக்கு ஏற்பாட்டு குழுத் தலைவராக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் அவர்களின் அலுவலக அதிகாரி டாக்டர் உமாராணி வழி நடத்துகிறார். இவருடன் பல அரசு சாரா இயக்கங்கள் இணைந்து இக்கண்காட்சியை நடத்துகின்றன.


Pengarang :