ECONOMYMEDIA STATEMENTNATIONAL

திறன் கல்வி வழி மாதம் ரி.ம. 20,000  சம்பாதிக்கலாம் – டாக்டர் குணராஜ்.

செய்தி. சு.சுப்பையா

பெ.ஜெயா.மார்ச்.23- திறன் கல்வி ( Tvet ) மூலம் மாதம் ரி.ம. 20,000.00 பெறலாம் என்று எஸ்.பி.எம் படித்த மாணவர்களுக்கு  திறன் கல்வி பெற அழைப்பு விடுத்தார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் 2024 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில அளவிலான சீருடை மற்றும் திறன் கல்வி கண்காட்சி ஏற்பாட்டாளருமான டாக்டர் குணராஜ்.

ஆயிரத்துக்கும் அதிகமான எஸ்.பி.எம். தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் எதிர்காலத்தை முன்வைத்து இந்தத் திறன் கல்வி கண்காட்சியை ஏற்பாடு செய்தார். குறிப்பாக எஸ்.பி.எம். தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் சிறப்பு தேர்ச்சி இல்லாமல் வழி தடுமாறி சென்று விடுகின்றனர். இவர்கள் திறன் கல்வி மூலம் தகுதியை உயர்த்திக் கொள்வதோடு பட்டப் படிப்பை மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்பாகக் கடலுக்கு அடியில் பத்ரி வைக்கும் (Under water Welding ) வேலைக்கு மாதம் ஒன்றுக்கு ரி.ம. 20,000.00 பெறலாம். இதே போல் பல வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த வேலை வாய்ப்புகளுக்கான கல்வித் தகுதி திறன் கல்வி கல்லூரிகளில் கிடைக்கின்றன.
இக்கல்வியைக் குறைந்த விலையில் அரசு கல்லூரிகளில் கற்கலாம். சிலாங்கூரில் உள்ள போலி தெக்னிக் கல்லூரி, இளைஞர் விளையாட்டு துறை அமைச்சின் கீழ்ச் செயல் படும் கல்லூரிகளும் வழங்குகின்றன. இங்குச் சான்றிதழ் மற்றும் டிப்ளோமா வரை படிக்கலாம். பின்னர் அரசு பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பும் குறைந்த விலையில் மேற்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

இக்கண்காட்சியில் சிலாங்கூர் மற்றும் மடாணி அரசின் கீழ் செயல்படும் 35 தொழிற்கல்வி கல்லூரிகளின் முகப்பிடச் சேவை மையங்கள் திறக்கப் பட்டிருந்தன.

அதே வேளையில் சீருடை தொழில்களான  போலீஸ் படை, இராணுவம், சுங்க இலாகா மற்றும் தீயணைப்பு படைகளின் சேவை மையங்களும் திறக்கப் பட்டிருந்தன. சான்றிதழ் பெற்றவர்கள், டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்பு பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதற்கான சேவைகள் இங்கு வழங்கப் படுகின்றன.

நோன்பு மாதத்தில் இத்திட்டம் நடைபெறுகிறது என்ற போதிலும் பெட்டாலிங் ஜெயா மா நகர் மன்றம் சிவிக் சென்டர் பொது மண்டபத்தை 2 நாட்களுக்கு கொடுத்து உதவியதற்கு டத்தோ பண்டார் ஹாஜி முகடைச் சஹ்ரி பின் சமிங் கொன் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார். அதே போல் இந்த 2 நாள் கண்காட்சி சிறப்பாக ஏற்பாடு செய்த தனது அதிகாரி டாக்டர் உமா ராணியையும் வெகுவாக பாராட்டினார்.

மேலும் இக்கண்காட்சி வெற்றி பெற எல்லா உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வரும் அரசு சாரா இயக்கங்களுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.


Pengarang :