SELANGOR

சுகாதாரப் பரிசோதனையில் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், மார்ச் 29: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஶ்ரீ கெம்பாங்கன் தொகுதியில் இலவசச் சுகாதாரப் பரிசோதனையில் பங்கேற்க பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

ஶ்ரீ கெம்பாங்கன் பல்நோக்கு மண்டபத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிலாங்கூர் சுகாதாரப் பரிசோதனை நடைபெறும் என்று பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

“இலவசச் சுகாதாரப் பரிசோதனையில் இதயம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகம் மற்றும் புற்றுநோய் (பெருங்குடல், புரோஸ்டேட், கர்ப்பப்பை, மார்பகம்) ஆகியவை அடங்கும்.

“மேலும், கண் (மயோபியா, விழித்திரை, கிளௌகோமா), பற்கள், காதுகள் மற்றும் பிசியோதெரபி போன்ற கூடுதல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் ,” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

செலங்கா செயலி மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் மற்றும் ஆரம்ப பரிசோதனை மூலம் தனிப்பட்ட ஆபத்து காரணிகளின் அடிப்படையில் பரிசோதனை வழங்கப்படுகிறது.

“பதிவு செய்வது தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், 1 800 22 6600 என்ற எண்ணில் Selcare ஐத் தொடர்புகொள்ளவும்” என்று அவர் கூறினார்.

பட்ஜெட் 2024யில் இலவச மருத்துவப் பரிசோதனையைத் தொடர RM3.2 மில்லியன் ஒதுக்குவதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.

குடியிருப்பாளர்கள் ஆரம்ப நிலையில் நோயைக் கண்டறிய உதவுவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Pengarang :