SELANGOR

இவ்வார இறுதியில் மேலும் ஏழு இடங்களில் மலிவு விற்பனை தொடரும்

ஷா ஆலம், மார்ச் 29: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப்
பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான்
ரஹ்மா திட்டம் இவ்வார இறுதியில் மேலும் ஏழு  இடங்களில் காலை 10
மணிக்குத் தொடரும்.

சனிக்கிழமை அன்று எம்பிகேகெ கம்போங் ராஜா மூசா (பெர்மாதாங்), மேடான் செலேரா வீரா சீவுட் (கோம்பாக் செத்தியா) மற்றும் புட்சால் கொம்பெலெக்ஸ் பிகேஎன்எஸ் பாங்கி வளாகம் (சுங்கை ராமால்) ஆகிய இடங்களில் மலிவு விற்பனை  நடைபெறும்.

மேலும், ஞாயிறு அன்று மலிவு விற்பனை பாலாய் ராயா கம்போங் பத்து பெலா (பண்டார் பாரு கிள்ளான்), சுராவ் நூருல் இமான் சுபாங் சூரியா (கோத்தா டாமன்சாரா), தாமான் கெமிலாங் பொது மண்டபம் (டெங்கில்) மற்றும் பாடி புகால் பாரிட் 7, பான் 3 (சிகிஞ்சான்) ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000
இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது.   ஐந்து
மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச்
சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்
மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை
ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00
வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


Pengarang :