SELANGOR

புதிய பணியாளர்கள் தேவையை பூர்த்தி செய்ய 22 நிறுவனங்கள் கூட்இயர் தொழிளார்களுக்கு வலை வீச்சு

ஷா ஆலம், மார்ச் 29: உலகளாவிய டயர் உற்பத்தியாளரான கூட்இயர் தொழிற்சாலை மூடபடவுள்ளதால்,அந்த தொழிற்சாலையில்  புதிய பணியாளர்களைத் தேடும் பணியை  ஏப்ரல் 22 முதல் 26 வரை  செய்யவுள்ளன. அதற்கான  முகப்பிடங்களை 22 நிறுவனங்கள் அங்கே திறக்கும்..

மேலும், 40 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாட்டிற்கு பிறகு ஜூன் 30 அன்று கூட்இயர் தொழிற்சாலை மூடப் படவுள்ளதை தொடர்ந்து புதிய வேலை வாய்ப்புகளை  அதன் முன்னாள்  ஊழியர்களுக்கு வழங்க இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக என்று மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பராய்டு விளக்கினார்.

“இது ஒரு நல்ல திட்டமாகும். கூட்இயர் ஊழியர்களுக்கு அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

அந்நிறுவனத்தின் பணியாளர்கள் “MyFutureJobs“ மற்றும் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதை சிலாங்கூர் சமூகப் பாதுகாப்பு அமைப்பு உறுதிசெய்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

மார்ச் 7 அன்று, கூட்இயர் ஷா ஆலமில் உள்ள அதன் உற்பத்தி ஆலையை மூட முடிவு செய்ததாக கூறப்பட்டது. இதனால் சுமார் 550 பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த மூடல் அந்நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் போர்ட்ஃபோலியோவை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அத்தொழிற்சாலையின் தலைவர் நிதானியேல் மடராங் கூறினார்.


Pengarang :