ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெப்ப வானிலையின் எதிரொலி- குவாந்தானில் 30 ஹெக்டர் சதுப்பு நிலப் பகுதியில் தீ!

குவாந்தான், மார்ச் 30- இங்குள்ள இண்ட்ராபுரா விவசாயத்  துறைப் பகுதியில் உள்ள சுமார் 30 ஹெக்டர் சதுப்பு நிலக்காட்டுப் பகுதி  வெப்ப வானிலை காரணமாக  நேற்று தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது.

தீயை அணைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக தீயணைப்பு வீரர்கள் நேற்று காலை 9.08 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பகாங் மாநில  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்  பேச்சாளர் தெரிவித்தார்.

சதுப்பு நிலக் காட்டுத் தீயை அணைக்கும் நடவடிக்கையில்  மாரான் மற்றும் பெரமு  நிலையங்களின் உதவியுடன் தாமான் தாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர் அவர் கூறினார்.

தீ ஏற்பட்டதாக மதிப்பிடப்படும் பகுதியின் அளவு   சுமார் 30 ஹெக்டராகும். இதுவரை 20 ஹெக்டர் பகுதியில் தீயை தீயணைப்புத் துறையினரால் அணைக்க முடிந்தது  என்று அவர் தெரிவித்தார்.

தீயை  அணைக்கும் நடவடிக்கை நேற்றிரவு 10 மணி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எஞ்சிய 10 ஹெக்டர் பகுதியில் தீயை அணைப்பதற்கும் மற்ற பகுதிகளுக்கு  தீ பரவாமல் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :