SELANGOR

முழுமையான செமிகொண்டக்டர் தொழில் சூழலை உருவாக்க ஒருங்கிணைந்த சுற்று (IC) வடிவமைப்பு மையம்

ஷா ஆலம், ஏப் 16: நாட்டில் ஒரு முழுமையான செமிகொண்டக்டர் தொழில் சூழலை உருவாக்க ஒருங்கிணைந்த  (IC) வடிவமைப்பு மையத்தை சிலாங்கூர் நிறுவும் என்று முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

இந்த வடிவமைப்பு மையமானது தொடர்புடைய துறைகளில் புதிய உள்ளூர் திறமையாளர்களுக்குப் பயிற்சியளிக்கும். இதனால் நூற்றுக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் திறக்கப் படும் என்று இங் சீ ஹான் கூறினார்.

“Suzhou“, “Shenzhen“ மற்றும் ஹோங் கோங் ஆகிய இடங்களுக்கு மேற்கொண்ட ஆறு நாள் பயணத்தின் போது, அவரது தூதுக்குழு 21 கூட்டங்களில் கலந்து கொண்டதுடன், 16 செமிகொண்டக்டர் நிறுவனங்கள் மற்றும் 10 அதன் தொடர்புடைய ஏஜென்சிகளுடன் கூட்டங்களை நடத்தியது என்று அவர் விளக்கினார்.

“நூற்றுக்கணக்கான ஐசி வடிவமைப்பு பொறியாளர்களை கொண்ட ஐசி வடிவமைப்பு மையத்தை நிறுவுவதன் மூலம் நாட்டில் முழுமையான செமிகொண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பை சிலாங்கூர் உருவாக்கும்” என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் அதிக முதலீட்டுத் திறனை உருவாக்கும் வகையில் செமிகொண்டக்டர் மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்படும் என்று இங் சீ ஹான் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் முந்தைய அமர்வில் தெரிவித்தார்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் விரைவில் அறிவிக்கப்படும் திட்டம் முன்பை விட சிறந்த செமிகொண்டக்டர் தொழில் சூழலை வழங்கும் என்றார்.


Pengarang :