SELANGOR

மறுசுழற்சி செய்யக்கூடிய 4,239 டன் பொருட்கள் சேகரிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஏப் 23: கடந்த ஆண்டு முழுவதும் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி பல்வேறு வகையான மறுசுழற்சி செய்யக்கூடிய மொத்தம் 4,239 டன்கள் பொருட்களை சேகரித்துள்ளது.

மேலும், 85 பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மறுசுழற்சி பொருள்களைச் சேகரித்ததன் மூலம் 1,917 டன்கள் பெறப்பட்டதாக அதன் மேயர் முகமட் ஜாஹ்ரி சமிங்கோன் தெரிவித்தார்.

“2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வீடு வீடாகச் சென்று சேகரிக்கும் திட்டத்தில் 54,500 குடியிருப்புகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதில் இதுவரை சராசரியாக 60.08 சதவீதக் குடியிருப்பாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

“இத்திட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு நாங்கள் மஞ்சள் பெட்டியை வழங்குகிறோம். அப்பெட்டியில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் நிறைந்த பிறகு அதனை சேகரிக்க பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியைத் தொடர்பு கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.

பெட்டாலிங் ஜெயாவில் வசிப்பவர்கள், “Nestle Products Sdn Bhd“ மற்றும் “Tetra Pak Malaysia Sdn Bhd“ போன்ற மூலோபாய பங்காளிகள் வழங்கிய பங்கு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் பென்ஹ்குவட் மண்டபத்தில் பெட்டாலிங் ஜெயா சமூகத்துடன் மறுசுழற்சி கார்னிவல் 2024 ஏற்பாடு செய்யப்பட்டது என்று முகமட் ஜாஹ்ரி கூறினார்.

“இந்தத் திட்டமானது குப்பைகளை அகற்றுவதற்கான சரியான முறை மற்றும் மறுசுழற்சி நடைமுறைகளை செயல்படுத்துவது தொடர்பாக உள்ளூர் மக்களுக்கு நேரடி அணுகுமுறையை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :