NATIONAL

கோலா குபு பாரு நகரில் சாலைகள் மூடப்பட்டதால் ஷட்டில் வேன் சேவை

ஷா ஆலம், ஏப் 25: சிலாங்கூர் அளவில் 2024 ஹரி ராயா விருந்திற்குச் சாலை மூடப் பட்டதைத் தொடர்ந்து கோலா குபு பாரு நகரைச் சுற்றியுள்ள வளாகங்களுக்கு வணிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் வசதிக்காக ஷட்டில் வேன் சேவை வழங்கப்படுகிறது.

நேற்று முதல் ஏப்ரல் 30 வரை மூன்று இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிஎச்எஸ்) தெரிவித்துள்ளது.

“மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு பக்கத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம், ஜாலான் டத்தோ தபால் வாகன நிறுத்துமிடம் மற்றும் தபால் நிலையத்துக்கு எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“இந்த தகவல் அனைத்து தரப்பினரின் விவகாரங்களையும் எளிதாக்கும் என்று நம்பப்படுகிறது. அனைவரின் ஒத்துழைப்பும் பெரிதும் பாராட்டப்படுகிறது,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

எதிர்வரும் சனிக்கிழமை மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கித்தா சிலாங்கூர் ரியூ ராயா திறந்த இல்ல உபசரிப்பு கோலா குபு பாரு நகரில் நடைபெறும்.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இவ்விழாவில் பார்வையாளர்களுக்காகக் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் காத்திருக்கின்றன என முகநூல் மூலம் சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் அலுவலகம் தெரிவித்தது.

அதில் பல்வேறு ராயா உணவுகள், பிரபல கலைஞர்களின் நிகழ்ச்சிகள், டுயேட் ராயா மற்றும் வானவேடிக்கை ஆகியவை அடங்கும்.


Pengarang :