Penyokong memasang bendera Pakatan Harapan (HARAPAN) ketika tinjauan di sekitar pekan Kuala Kubu Bharu, Hulu Selangor pada 1 Mei 2024. Foto FIKRI YUSOF/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENT

தாய்மொழி பள்ளிகளில் படித்தவர்கள் தேர்தலில் நிற்க தகுதியற்றவர்களா- பாஸின் பிதற்றலை கண்டிக்க ஏன் தயக்கம்?

ஷா ஆலம்  மே 2 ;-தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தாய்மொழி கல்வி தொடர்ந்து  இந்த நாட்டில் உயிர் வாழ  பிஎன்  வேட்பாளரை  கோல குபு  இடைத்தேர்தலில் மட்டுமல்லாமல் தொடர்ந்து  புறக்கணிக்க வேண்டும்.

தாய்மொழிக் கல்விக்கு எதிராக  நீதிமன்றம் சென்ற அமைப்புகள்  முன்னாள் பிரதமர் துன் மாகாதீரிடம்  ஆசிப்பெற்று  நீதிமன்றம் சென்றதை இந்தியர்கள் மறந்திருக்க முடியாது. மகாதீர்  பெரிக்காத்தான் நேஷனல்  தானைய தலைவர் என்பதும் நாம்  அனைவரும்  அறிந்த உண்மை.
கோல குபு  டிஏபி  வேட்பாளர் கல்விக் குறித்து கேள்வி எழுப்பிய பாஸ் கட்சியின்  பாசீர் மாஸ்  நாடாளுமன்ற உறுப்பினரின் செயல்  கண்டிக்கத்தக்கது.  அவர் கல்வி தகுதியை பற்றி கேள்வி எழுப்பவில்லை. ஆனால்  தாய்மொழி பள்ளியில் கல்வி கற்றது குறித்து  கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆக அவர் கருத்துப்படி தாய்மொழி பள்ளிகளில் படிப்பவர்கள் தேர்தலில் நிற்க தகுதியற்றவர்களா?  தாய்மொழிப் பள்ளிகளில்  படித்தவர்களின் தேசப்பற்று மீது  கேள்வி எழுப்புகிறாரா?  அல்லது மக்கள்  தாய்மொழிப் பள்ளிகளில் படித்ததால் அவருக்கு ஓட்டு போடக்கூடாது  என்கிறாரா?
இப்படிப்பட்ட இவர்கள் தாய்மொழி கல்வி கற்றவர்களுக்கு  இந்நாட்டில் வேலை வாய்ப்புகள் வழங்கக்கூடாது , பதவி உயர்வு வழங்க கூடாது என்ற கட்டுபாடுகளைகூட  ஏன் முன் மொழிய மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்?
எது எப்படியானாலும்  பெரிக்காத்தான் கட்சி  தாய்மொழிக்  கல்விக்கு எதிரான ஒரு இயக்கம் என்பது தெளிவாகிறது.  இந்நாட்டில்  தாய்மொழிப் பள்ளிகள்  பல சவால்களுக்கு இடையில் உயிர் வாழ்கிறது என்பதை நாம் அறிவோம், அரசாங்க  ஆதரவு இன்றி தாய்மொழிப் பள்ளிகள்  வெகுதூரம் செல்ல முடியாது.
ஆனால் , தாய்மொழி கல்விக்கு எதிரான கருத்தை வெளியிட்டவருக்கு எதிராக  இதுவரை எந்த பெரிக்காத்தான் தலைவர் மற்றும்  கோல குபு பாருவில்  இந்தியர்களை  ஓட்டுப் போட வேண்டாம் என்று சொல்லும் இந்திய  தலைவர்கள், ஏன்  எதிர்வினையாற்ற வில்லை.
அவர்கள்  பாஸ் பிரச்சார அணி தலைவரான அஹ்மாட் பட்லி சாரி  கருத்தை அப்படியே  ஏற்று கொள்கிறார்கள்  என்பதற்கான அடையாளமா ?  அடுத்த தேர்தலில்  சீட்டு வாங்க  பாஸ் தயவு வேண்டும்  என்று  இப்பொழுதே  இந்திய சமுதாயத்தை காட்டி கொடுக்க முற்பட்டு விட்டார்களா ?

Pengarang :