ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசியாவிலுள்ள பௌத்த சமயத்தினருக்கு பேரரசர் தம்பதியரின் விசாக தின வாழ்த்து

கோலாலம்பூர், மே 22- இன்று விசாக தினத்தைக் கொண்டாடும் நாட்டிலுள்ள அனைத்து பௌத்த சமயத்தினருக்கும் மேன்மை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா தம்பதியர் தங்களின் விசாக தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

தேசிய ஒற்றுமைக்கு இன நல்லிணக்கம் தூண்களாக விளங்குவதாக மாமன்னர் தம்பதியர் தெரிவித்தனர்.

“நாட்டிலுள்ள அனைத்து பௌத்த சமயத்தினருக்கும் விசாக தின வாழ்த்துகள்“ என்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார் பேஸ்புக் பக்கத்தில் பேரரசர் குறிப்பிட்டுள்ளார்.


Pengarang :