ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இலக்கிடப்பட்டவர்களுக்கு மானிய விநியோகத்திற்கு சரியான வழிமுறை ஏற்படுத்த  அரசாங்கம் உறுதி

கோலாலம்பூர், மே 23 – எரிபொருள் உள்ளிட்ட இலக்கிடப்பட்ட  பிரிவினர் மானியங்களை  பெற , அரசாங்கம் சரியான விநியோக பொறியை  ஏற்படுத்துவதில் உறுதியாக உள்ளதாக நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஜிசன் கூறினார்.

இந்த அரசாங்கம்  புதிய முறையை நடைமுறை படுத்தப்படும் போது, அது சரியாகச் செய்யப்படுவதையும் சரியான குழுக்களுக்கு உதவிகள் சேர்வதையும்  உறுதி செய்வதற்கான பொறிமுறையை  சரிசெய்து வருகிறது.

மானியங்கள் பகுந்தளிப்பு செய்யப்பட அரசாங்கம் போதுமான மானிய ஊக்கத் தொகைகளை அமைப்பிற்கு  வழங்குவதை உறுதி செய்வதற்கு இது உதவும்.

“(எரிபொருள்) மானியத்தில்  பெரிய அளவில்  கசிவுகள் உள்ளன, ஊக்கத் தொகைகள் மிக அதிகமாகவும், பரவலாகவும் இருப்பதால்  கசிவுகள் ஏற்படுகின்றன  என்பது எங்களுக்குத் தெரியும். மானியம் பெற தகுதியானவர்கள் மட்டுமே, அதனை பெறும் வகையில் நாம் மாற்ற வேண்டும்.

“ஆனால் நாம் செய்ய வேண்டியது பகிர்ந்தளிப்பை செயல்படுத்துவது தான்.அதற்கான பொறிமுறை உண்மையில் சரியாக இருக்க வேண்டும். அதைச் செய்யும்போது, அது சரியான இலக்கை அடையும் வகையில் சீர் செய்ய அரசாங்கம் இப்போது   முயற்சிக்கிறது என்று நினைக்கிறேன்.

“மானியம் பகிர்ந்தளிப்பு வரும், ஆனால் இந்த விஷயங்களை நாம்  சரியாக  கையாள தயாராகாமல்  நாங்கள் பொத்தானை அழுத்த மாட்டோம்,” என்று அவர் சமீபத்திய @EY C-Suite மன்றத்தின் போது கூறினார்.

மலேசியாவில் டீசல் மானியம் ஒவ்வொரு மாதமும் 1 பில்லியன் ரிங்கிட் அரசாங்கத்திற்கு பில் வருகிறது என்று அமீர் ஹம்சா கூறினார்.

சந்தை விலையில் உள்ள ஏற்றத்தாழ்வால்  பல ஆண்டுகளாக அண்டை நாடுகளுக்கு  டீசல் கடத்தப்படுவதை ஊக்குவிக்கிறது மற்றும் வணிகத் துறையின் பெரும் பகுதியினர் மலிவான டீசலின் லாபத்தையும் அதிகரிக்க அனுமதித்துள்ளது.

“கசிவுகளால் ஏற்படும் இழப்புகள் ஒரு நாளைக்கு சுமார் RM4.5 மில்லியன்,  அப்படியானால் நாட்டின் இருப்பில் உள்ள மானியங்கள் நீண்ட காலத்திற்கு நீடிக்க  கூடியவையல்ல என்பதையும் சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு  மட்டுமே  இதை உதவியாக பெற  ஒரு கருவியாகப் பயன் படுத்த வேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


Pengarang :