SELANGORUncategorized @ta

சிலாங்கூர் மாநில அரசாங்கம், எஸ்பிஆர்எம் நடவடிக்கையை கண்டு வருத்தம்

ஊடகச் செய்தி

22 ஆகஸ்ட் 2017

சிலாங்கூர் மாநில அரசாங்கம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சிலாங்கூர் பல்கலைக் கழகம்  (யுனிசெல்) மற்றும் மந்திரி பெசார் பெறுநிறுவனம்  (எம்பிஐ) ஆகிய இரண்டிலும் நடவடிக்கையில் இறங்கிய செயலை கண்டு வருத்தம் கொள்கிறோம்.

இது சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை மாசுபடுத்தும் செயலாகவே தெரிகிறது. எப்போதும் வெளிப்படையான மற்றும் பொறுப்புள்ள செயல்பாடுகள் கொண்டு செயல்படும் மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மையை கெடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கையை வரவேற்பதாகவும், ஆனாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு செயல்படும் நடவடிக்கையாக இருக்காது என்று எதிர் பார்க்கிறோம். ஊழல் தடுப்பு ஆணையம், அரசியல் தலையீடுகள் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது தான் பொது மக்கள் அதன் நடவடிக்கையில் நம்பிக்கை ஏற்படுத்த முடியும்.

இதனிடையே, மாநில அரசாங்கம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதி கூறுகிறோம். அதே வேளையில், மாநில அரசாங்கத்தின் பொறுப்புள்ள செயல்பாடுகள் மற்றும் நேர்மையான நிர்வாகத்தை எப்போதும் தற்காத்து வருவோம்.

சிலாங்கூர் மாநில கல்வி, மனித வள மேம்பாடு, அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய நிரந்தரக் குழுக்களின் ஆட்சிக் குழு உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அமாட் மற்றும் எம்பிஐ ஏற்கனவே 25 ஜூலை 2017 மற்றும் 27 ஜூலை 2017 ஆகிய தினங்களில் ஜானா நியாகா நிறுவனம் சம்பந்தமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகள் நீதிமன்ற தீர்ப்பின்  அடிப்படையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்திற்கு வெளியே யுனிசெல் மற்றும் ஜானா நியாகா நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தம் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி சம்பந்தப்படவில்லை.

யீன் ஷாவ் லூங்

வியூக தொடர்பு இயக்குனர்

சிலாங்கூர் மந்திரி பெசார் அலுவலகம்


Pengarang :