ECONOMYNATIONALSELANGORTOURISM

தீபகற்ப மலாயாவில் இரயில் பயணங்களுக்கு 50 விழுக்காடு கழிவு

கோலாலம்பூர் அக் 27 ;- இன்று முதல் எதிர் வரும் நவம்பர் மாதம் 9ந் தேதி வரைக்குமான நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலிலுள்ள காலத்தில் இரயில் போக்குவரத்து பயணிகளுக்கான கட்டணம் 50 விழுக்காடாகக் குறைக்கப்படுவதாக மலாயா இரயில்வே கழகத்தின் தலைமை செயல் முறை அதிகாரி இஞ்ஞினியர் டத்தோ கமருல் ஜாமான் சைனால் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த்தொற்றினால்  இரயில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டாலும், அட்டவணையிடப் பட்ட பட்டியல் படி எல்லா ஊர்களுக்கும் தும்பாட்டிலிருந்து கிம்மாஸ் மற்றும் ஜோகூர்பாரு – கோலாலம்பூர், பாடாங் பெசார் – கோலாலம்பூர் மற்றும் ஈப்போ மற்றும் பட்டர்வெர்த் இடையிலான எல்லா இரயில் சேவைகளும், மின்சார இரயில் போக்குவரத்தும், தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்றார் அவர்.

இந்தப் பயணங்களுக்குப் பயண அனுமதிகளை (டிக்கெட்களை) நிகழ்நிலை சேவைகளின் வழி (ஓன் லைனில்) வழி பெறலாம் என்றார் அவர்.


Pengarang :