ECONOMYPBTSELANGOR

நடுத்தர  மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களின்  தேவைக்கு  40,000 யூனிட்  வீடுகள் கட்ட இலக்கு

ஷா ஆலம், டிச 12: எதிர்வரும்  2022 க்குள் 40,000 யூனிட் இடாமான் வீடுகளை  நிர்மாணிக்க மாநில அரசு இலக்கு வைத்துள்ளது என்று  வீடமைப்பு, நகர்ப்புற நல்வாழ்வு மற்றும் தொழில் முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான ரோட்சியா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இதுவரை நான்கு திட்டங்களில் 6,029  வீடுகளுக்கான  திட்ட அனுமதிகள் வழங்கப் பட்டுள்ளது அல்லது வீடுகள் கட்டுமானத்தில் உள்ளன.

ரூமா இடாமான் என்னும் இந்த நடுத்தர வர்க்கம் (எம் 40) மற்றும் குறைந்த வருமானம் கொண்ட (பி 40) பிரிவினருக்கான இவ்வீட்டுத் திட்டத்தின் வழி அப்பிரிவு மக்களின் வீட்டுப் பிரச்சனையைத் தீர்க்க இயலும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

வீடமைப்பு அம்சம் ஒரு இணக்கமான சமுதாயத்தையும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் உருவாக்குவதற்கு ஒரு முக்கியமான விஷயம், எனவே மக்களுக்கு மலிவு விலை வீடுகளை வழங்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் இன்று தெரிவித்தார்.

குடியிருப்புகள் ஒவ்வொன்றும்  1,000 சதுர அடிக்கு மேல் பரப்பளவைக் கொண்டுள்ள  வேளையில்  ஏர் கண்டிஷனிங், சமையலறை  அலமாரிகள், துணி  அலமாரிகளும்,  குளியல் அறையில்  சுடுநீர் ( ஹீட்டர்)களும் பொருத்தப்பட்ட  RM250,000 மதிப்பில் கட்டப்படுகின்றன. ஆரம்பமாக இவ் வீட்டுத் திட்டங்கள் காஜாங், பாங்கி மற்றும் பாய ஜராஸில் மேற்கொள்ளப் படுகின்றன.

ஜூலை 13 ம் தேதி,  சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  குறைந்த மற்றும் நடுத்தர அளவிலான வீட்டு உரிமை பிரச்சினையைத் தீர்க்கும் RM12 பில்லியன் பொருளாதார மதிப்புள்ள வீட்டுத் திட்டங்களை அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்றார்.

 


Pengarang :