ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

வரவுசெலவுத் திட்டத்திற்கு  ஒப்புதல்  கிடைத்தாலும் சர்வதேச மதிப்பீட்டில்  தரமிறக்கியே  இருக்கும்.

ஷா ஆலம், டி.இ.சி 15: கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து நாட்டிற்குப் பொருளாதார மாற்றம் தேவைப்படும்போது அரசாங்கத்தால் அதன் பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்ற முடியவில்லை.

2021 வரவுசெலவுத் திட்டம் இன்று  டேவான் ராக்யாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட போதிலும், இந்த விவகாரம் தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் (பி.என்) நம்பிக்கையை அதிகரிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

பட்ஜெட் விவரங்களில் உள்ள பலவீனம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விநியோக மசோதாவை (ஆர்.யு.யு) ஒருமனதாக எதிர்க்க காரணமாக அமைந்தது என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கினார்.

“பிஎன் அரசாங்கம் நம்பிக்கையின்மை சிக்கலைத் தொடர்ந்து எதிர்கொள்ளும், இது 112 க்கும் அதிகமான ஆதரவைக் கொண்டிருக்கவில்லை என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

“இது போன்ற பலவீனமான அரசாங்கங்கள்  பேராசை கொண்ட ஊழல் வாதிகளின்  மிரட்டல்களுக்குத்  தொடர்ந்து அடிபணிய  நேரிடும்.  மக்களின் நலன் தொடர்ந்து  பலியிடப்படும்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2021 வரவுசெலவுத் திட்டம், மக்கள் நலனுக்காக  அன்றி, பி.என் அரசாங்கத்தின்  அரசியல் வாழ்வுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறது என்பதை 2021 வரவுசெலவுத் திட்டம் உணர்த்துகிறது. என்று பார்ட்டி கெஅடிலான் ராக்யாட் (கெடிலன்) தலைவர் கூறினார்.

ஊழியர்  சேம நிதி (இபிஎஃப்)  பிரச்சினை, சமூகத் தகவல் தொடர்புத் துறைக்கு (ஜே-கோம்) பெரிய ஒதுக்கீடு மற்றும் வர்த்தகர்களுக்கான நிதி குறித்து முன்னர்ச் சில எம்.பி.க்கள் பட்ஜெட்டுக்குக்  குரல் எழுப்பியிருந்தும்,  நாடாளுமன்றத்தில் அவர்கள் ஆதரவாக வாக்களித்திருப்பது  வருத்தம்  அளிப்பதாகவுள்ளதாக அவர்  தெரிவித்தார்.

பி.என் அரசாங்கம்,  அரசாங்க  ஊழியர்களின் சம்பளத்தை இந்தப் பட்ஜெட்டுடன் இணைத்து முடிச்சு போட்டிருப்பதால், அரசு ஊழியர்களின் நலன் மற்றும் சம்பளம் பாதிக்கப்படும் என்ற  அச்சத்தில், பல எம்.பி.க்கள் பட்ஜெட்டை ஆதரித்திருப்பதாகத் தெரிகிறது.

“மேலும் கருத்து தெரிவித்த போர்டிக்சன் எம்.பி. டத்தோ ஸ்ரீ  அன்வார், ” பலவீனமான நிர்வாகம் மற்றும் நிதி  ஆளுமை செயல்திறன்  அற்ற இவ்வரசாங்கம் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வல்லமையை  இழந்துவிட்டது  என்றார்.

சர்வதேசப் பொருளாதார  மதிப்பிட்டு நிறுவனமான  ”ஃபிட்ச் ” அதன் மதிப்பீட்டில்  மலேசியாவை அண்மையில் தரமிறக்கியது. பொருளாதார நிர்வாகத்தின் பலவீனமான செயல்திறன் மற்றும் நாட்டின் நிர்வாகத்தின் அவ லட்சணத்தைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

“நாட்டை  இவ்வரசு வெளிப்படையான சகாப்தத்திலிருந்து  திரும்பி இருட்டுக்குக்  கொண்டு செல்லுகிறது.  அங்கு வெளிப்படைத்தன்மை, நல்லாட்சி மற்றும் திறமையான நிதி மேலாண்மை கொள்கைகளுக்கு இடமிருக்காது !

அதனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை பாதிக்கும், மேலும்  இவ்வட்டார  நாடுகள் பல்வேறு துறைகளில் மலேசியாவைப்  பின்னுக்குத் தள்ளி,  பொருளாதார மற்றும் மேம்பாட்டு துறைகளில் முன்னேறிச் செல்லும் வாய்ப்பு உள்ளது” என்று அவர் கூறினார்.

முன்னதாக, பிளவு வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட 2021 வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பில்  111 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஆதரித்தும்  108  உறுப்பினர்கள் எதிராகவும்  வாக்களித்தனர் என்றார் அவர்.


Pengarang :