ECONOMYSELANGORUncategorized

சிகிஞ்சான் விவசாயிகள், மீனவர்கள் வருமானம் சீரான நிலைக்கு திரும்பியது

ஷா ஆலம், டிச 28– சபாக் பெர்ணம் மாவட்டத்தில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து சிகிஞ்சான் வட்டார விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வருமானம்  மறுபடியும் வழக்க நிலைக்கு திரும்பியுள்ளது.

பொது முடக்கம் தொடர்ந்து அமலில் இருந்த போதிலும் விவசாய பொருள்கள் மற்றும் கடல்சார் உணவுப் பொருள்களைப் பெறுவதற்காக வெளியூர் வியாபாரிகள் இங்குள்ள உற்பத்தியாளர்களை தொடர்ந்து அணுகி வருவதாக  கிசிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுய் லிம் கூறினார்.

நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்த போது விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நடமாட்டம் எல்லைக்குட்பட்டதாகவே இருந்தது. இதனால் வெளி சந்தைகளில் உற்பத்தி பொருள்களை விற்பதற்கான வாய்ப்பும் குறைந்து காணப்பட்டது. எனினும் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்றின் பாதிப்பு தொடர்ந்து இருந்து வந்த போதிலும் உற்பத்தி பொருள்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

நம்பிக்கையூட்டும் வகையிலான இந்த மாற்றம் மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு புதுத் தொம்பினை உண்டாக்கி உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.


Pengarang :