Projek perumahan
ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூர் பி.பி.ஆர். திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும்- ரோட்சியா இஸ்மாயில்

சிலாங்கூர் பி.பி.ஆர். திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும்- ரோட்சியா இஸ்மாயில்

 

ஷா ஆலம், ஜன 18- சிறந்த மலிவு விலை குடியிருப்பை ஏற்படுத்தித் தருவதில் மாற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் வகையில் பி.பி.ஆர். எனப்படும் மக்கள் வீடமைப்புத் திட்டத்தை உருவாக்க சிலாங்கூர் அரசு முனைந்து வருகிறது.

இந்த முன்னுதாரண குடியிருப்பு சிறப்பான நிர்வாகம், முறையான பராமரிப்பு, சுபிட்சமான குடும்பம், பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த சமூக உருவாக்கத்திற்கான வசதி ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

பி.பி.ஆர். குடியிருப்பை ஒரு முன்னுதாரண குடியிருப்பாக மாற்றுவது கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி இத்துறைக்கு பொறுப்பேற்ற இந்த 100 நாட்களில் தாம் கொண்ட லட்சியமாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

கட்டிட ஆணையப் பிரிவு மற்றும் ஜே.எம்.பி. எனப்படும் கூட்டு நிர்வாக அமைப்பு ஆகியவற்றின் பங்களிப்பை மேம்படுத்துவதன் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளின் மேம்பாட்டிற்கு மாநில அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றார் அவர்.

சிலாங்கூர் கூ கட்டுபடி விலை வீடமைப்புத் திட்டத்தில் நடப்பிலுள்ள கொள்கைகளுக்கு மாற்றாக புதிய கொள்கைகளை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் கூ திட்டத்தில் 700 முதல் 1.00 சதுரஅடி வரையிலான பரப்பளவு கொண்ட ஐந்து  மாதிரியான வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த வீடுகள் 42,000 வெள்ளி முதல் 250,000 வெள்ளி வரையிலான விலையில் விற்கப்படுகின்றன.

 


Pengarang :