ALAM SEKITAR & CUACAECONOMYPBTSELANGOR

20 காசு கட்டணத்தின் மூலம் செலாயாங் கடந்தாண்டில் 292,513.50 வெள்ளி வசூல் செய்தது

ஷா ஆலம், ஜன 29-  கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு 20 காசு கட்டணம் விதிக்கும் திட்டத்தின் மூலம் செலாயாங் நகராண்மைக்கழகம் கடந்தாண்டில் 292,513.50 வெள்ளியை வசூல் செய்துள்ளது.

அந்த தொகையில் 60 விழுக்காடு அதாவது 175,508 வெள்ளி மாநில அரசின் அறக்கட்டளை நிதியில் சேர்க்கப்பட்டது. ஊராட்சி மன்றப் பிரிவுக்கான மாநில அரசு தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கைக்கேற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எஞ்சிய 40 விழுக்கட்டுத் தொகை ஊராட்சி மன்றத்தின் கீழுள்ள அறக்கட்டளை நிதியில் சேர்க்கப்பட்டது. இந்த நிதி சுற்றுச் சூழல் தொடர்புடைய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

நெகிழிப் பைகளுக்கு கட்டணம் விதிக்கும் வர்த்தக ஸ்தாபனங்கள் ஊராட்சி மன்றங்களில் பதிந்து கொள்ள  வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக செலாயாங் நகராண்மைக்கழகத் தலைவர் சம்சுல் ஷாரில் பட்லிசா முகமது நோர் கூறினார்.

நெகிழிப் பைகளுக்கான கட்டணத்  தொகையை ஊராட்சி மன்றங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறையை மாநில அரசு கடந்தாண்டு ஜனவரி மாதம் அமல்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் இந்த கட்டணத் தொகையை சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் சமூக கடப்பாடு சார்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு வந்தனர்.


Pengarang :