ECONOMYPBTSELANGOR

நீர் மறுபயனீட்டு ஆலையின் உருவாக்கம் தொடர்பில் ஆயர் சிலாங்கூர்- இண்டா வாட்டர் உடன்பாடு

ஷா ஆலம், மார்ச் 16– தொழில்துறையின் தேவைக்காக நீர் மறுபயனீட்டு ஆலையை உருவாக்குவது தொடர்பில் ஆயர் சிலாங்கூர் நிறுவனமும் இண்டா வாட்டர்  குழுமமும் உடன்பாடு கண்டுள்ளன.

இதன் தொடர்பில் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடும் சடங்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் டத்தோ துவான் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலையில் இன்று இங்கு கையெழுத்தானது.

ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைமை செயல் முறை அதிகாரி சுஹாய்மி கமாருள்மானும் இண்டார் வாட்டர் குழுமத்தை பிரதிநிதித்து அதன் தலைமை செயல் முறை அதிகாரி நரேந்திரன் மணியமும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அந்த நீர் மறுபயனீட்டு ஆலையை நிர்வகிக்கவிருக்கும் புதிய நிறுவனத்தின் பங்குரிமை தொடர்பான ஒப்பந்தமும் இந்நிகழ்வில் கையெழுத்தானது. சென்ட்ரல் வாட்டர் ரிக்லமேஷன் சென். பெர்ஹாட் என்ற அந்த நிறுவனத்தில் 60 விழுக்காட்டு பங்குகளை ஆயர் சிலாங்கூர் நிறுவனமும் 40 விழுக்காட்டு பங்குகளை இண்டா வாட்டர் குழுமமும் கொண்டிருக்கும்.

செத்தியா ஆலமில் அமல்படுத்தப்படவிருக்கும் அந்த அந்த ஆலை தினசரி 80 லட்சம் லிட்டர் இண்டா வாட்டர் குளத்து நீரை மறுபயனீட்டுக்கு உகந்த வகையில் சுத்திகரிப்பு செய்யும்.

இத்திட்டத்தின் வாயிலாக குடியிருப்புகள் மற்றும் தொழில்துறைக்கு தேவையான நீரை தனித்தனியே பிரிப்பதற்குரிய வாய்ப்பு கிட்டும்.


Pengarang :