ECONOMYPBTSELANGORYB ACTIVITIES

கிள்ளான் ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள் காரணமாக அந்த ஆற்று நீரின் தரம் உயர்ந்துள்ளது.

கிள்ளான், மார்ச் 24-  கிள்ளான் ஆற்றில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள் காரணமாக அந்த ஆற்று நீரின் தரக் குறியீடு நான்காம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்கு உயர்ந்துள்ளது.

அக்காலக்கட்டத்தில் அந்த ஆற்றிலிருந்து 67,000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

எஸ்.எம்.ஜி. எனப்படும் சிலாங்கூர் கடல் நுழைவாயில்  திட்டத்தின் வாயிலாக இந்த குப்பைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணிக்கு இதுவரை 4 கோடியே 50 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், குப்பைகளைத் அகற்றுவதற்கு ஏதுவாக ஆற்றில் தடுப்புகளை அமைப்பதும் இதில் அடங்கும் என்றார்.

முன்பு நாளொன்றுக்கு 40 முதல் 50 மெட்ரிக் டன்னாக இருந்த ஆற்றிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளின் அளவு தற்போது 30 முதல் 3 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது என்றார் அவர்.

கிள்ளான் ஆறு மற்றும் பெங்காலான் பத்து பகுதிகளுக்கு நேற்று வருகை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கிள்ளான் ஆற்றில் நீரின் தரம் மேம்பட்டதற்கு இண்டர்செப்டர் கருவியின் பயன்பாடும் பெரிதும் துணை புரிந்தது. இந்த கருவியின் துணையுடன் தலைநகர், மிட்வேலி தொடங்கி கோலக்கிள்ளானிலுள்ள ஆற்றின் முகத்துவாரம் வரை தூய்மைப்படுத்தும் பணியை எளிதாக மேற்கொள்ள முடிந்தது என்று அவர் மேலும் சொன்னார்.

தி .ஒஷியன் கிளீன்ஆப் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அந்த அதிநவீன  தொழில் நுட்பத்தைக் கொண்ட இயந்திரத்தின் உதவியுடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் முதல் நதியாக கிள்ளான் ஆறு விளங்குகிறது.

அரசு சாரா அமைப்புகளின் ஒத்துழைப்பின் வாயிலாக இந்த இண்டர்செப்டர்  இயந்திரத்தின் சேவையை சிலாங்கூர் அரசு இலவசமாக பெற்றுள்ளது. ஆற்றிலுள்ள எல்லா வகையான மற்றும் அளவிலான குப்பைகளை அகற்றும் திறனை இந்த இயந்திரம் கொண்டுள்ளது.


Pengarang :