MEDIA STATEMENTPENDIDIKANSELANGORYB ACTIVITIES

கின்ராரா தொகுதி ஏற்பாட்டில 100 பேருக்கு மடிக்கணினிகள் விநியோகம்

ஷா ஆலம், மார்ச் 25- இலக்கவியல் இடைவெளியைக் குறைக்கும் விதமாக கின்ராரா  சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 100 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

பிள்ளைகளின் கல்வியை நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த உதவித் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இந்த மடிக்கணினி திட்டத்திற்கு 500 விண்ணப்பங்கள் கிடைத்த போதிலும் இதுவரை தகுதியுள்ள 100 குடும்பங்களுக்கு மட்டுமே அந்த கணினிகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நாங்கள் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்குச் சென்று விரிவான ஆய்வை மேற்கொள்ளவுள்ளோம். சரியான தரப்பிடம் உதவிகள் சென்று சேர்வதை உறுதி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் வழிமுறை இதுவாகும் என்றார் அவர்.

இதனிடையே, கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட் டாப்போர் கின்ராரா எனப்படும் மதிய உணவு விநியோகத் திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை வசதி குறைந்த குடும்பங்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறோம். கடந்த வாரம்கூட 200க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தோம் என்றார் அவர்.


Pengarang :