ECONOMYPBTSELANGOR

ராயா இ-பாசார் திட்டத்தின் வழி .70 கோடி வெள்ளியை ஈட்ட சிலாங்கூர் திட்டம்

ஷா ஆலம், ஏப் 7-  மாநிலத்தின் பொருளாதார விளைவுகளை சரி செய்யும் விதமாக 2021ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் ராயா இ-பாசார் திட்டத்தின் மூலம் 70 வெள்ளி ஈட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இம்மாதம் 15ஆம் தேதி முதல் மே மாதம் 29ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த இயக்கத்தின் வாயிலாக இந்த இலக்கை அடைய முடியும் என மாநில அரசு நம்புவதாக முதலீடு, தொழில்துறை, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

கடந்த 2020 மற்றும் 2021இல் மூன்று முறை நடத்தப்பட்ட சிலாங்கூர் இ-பாசார் இயக்கத்தின் மூலம் 200 கோடியே 30 லட்சம் வெள்ளியை ஈட்ட முடிந்தது. நேரடி விற்பனையின் வாயிலாக கிடைத்த 7 கோடியே 97 லட்சம் வெள்ளியும் இதில் அடங்கும் என்றார் அவர்.

இது மிகவும் ஊக்கமூட்டும் வகையிலான அடைவு நிலை என்பதால் ராயா இ-பாசார் இயக்கத்தை இவ்வாண்டிலும் தொடர விரும்கிறோம் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாநில அரசு அறிமுகப்படுத்திய இலக்கவியல் பொருளாதாரத் கொள்கை வணிகர்கள் இயங்கலை வாயிலாக மேலும் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கு வழி வகுத்துள்ளதோடு கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தையும் சமாளிக்க உதவியது என்று அவர் குறிப்பிட்டார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளில் இலக்கவியலை அறிமுகப்படுத்தும் முயற்சிகளை மாநில அரசு தொடர்ந்து முன்னெடுத்து வரும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :