ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சாலைத் தடுப்புகளில் எந்த அமைச்சின் அனுமதி கடிதத்தையும் போலீசார் ஏற்றுக் கொள்வர்

ஷா ஆலம், ஜூன் 3– பணி நிமித்தக் காரணங்களுக்காக எந்த அமைச்சு அல்லது இலாகாவும் வழங்கும் அனுமதி கடிதத்தையும் சாலைத் தடுப்புகளில் போலீசார் ஏற்றுக் கொள்வர்.

தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறைக்கான நடவடிக்கை பிரிவு தலைமை உதவி ஆணையர் எம்.வி. ஸ்ரீகுமார் எம். நாயர் கூறினார்.

மிட்டி எனப்படும் அனைத்துலக வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சாக இருந்தாலும் வேறு அமைச்சுகள் மற்றும் இலாகாக்களாக இருந்தாலும் பயண அனுமதிக்கான கடிதங்களை ஏற்றுக் கொள்ளும்படி தேசிய போலீஸ் படைத் தலைவர் பணித்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

சாலைத் தடுப்புகளில் பணியாற்றும் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இதனை கவனத்தில் கொள்ளுபடி கேட்டுக் கொள்கிறோம் எனறு காணொளி வாயிலாக அவர் கூறினார். அந்த காணொளியை போக்குவரத்து அமைச்சு தனது அமைச்சின்  பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டது.

நடமாட்டக்  கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட அனைத்து துறையினரும் அனைத்துலக வாணிக அமைச்சிடமிருந்து புதிய அனுமதி கடிதங்களைப் பெற வேண்டும் என்று கடந்த மாதம் 31ஆம் தேதி அக்ரில் சானி கூறியிருந்தார்.

 


Pengarang :