ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

கின்ராரா தொகுதியில் வீடு வீடாக உணவு விநியோகம்- சட்டமன்ற உறுப்பினர் தகவல்

ஷா ஆலம், ஜூன் 30– வீடமைப்பு பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அடிப்படை உணவுப் பொருள்களை குடியிருப்பாளர்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யும் நடவடிக்கையில் கின்ராரா சட்டமன்றத் தொகுதி ஈடுபட்டுள்ளது.

உணவுப் பற்றாக்குறைப் பிரச்னையை எதிர்நோக்கிய போதிலும் தயக்கம் மற்றும் வெட்கம் காரணமாக பலர் இத்தகைய உதவிகளை பெற விரும்பாததை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

நேற்று முன்தினம் நாங்கள் தொகுதியிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு மீன்களை விநியோகம் செய்தோம். வழக்கமாக, விண்ணப்பம் செய்வோருக்கு மட்டுமே உணவுக் கூடைகள் வழங்கப்படும். எனினும், உதவி பெற தயக்கம் காட்டுவோரும் நம்மிடையே உள்ளதை நாங்கள் உணர்ந்துள்ளோம். 

ஆகவே, நேரடியாக அவர்களை அணுக முடிவெடுத்துள்ளோம். இதன் மூலம் அவர்களின் மனக்குறைகளையும் கேட்டறிவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்பதோடு அவர்களுக்கு தேவைப்படும்  உதவிகளையும் அடையாளம் காண இயலும் என்றா அவர்.

தொகுதி ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும வசதி குறைந்தவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :