SHAH ALAM, 3 Julai — Anggota Polis dari Ibu Pejabat Polis Daerah Shah Alam melakukan pemeriksaan ke atas para pekerja ketika Op Patuh berikutan hari pertama pelaksanaan Perintah Kawalan Pergerakan Diperketatkan (PKPD) di sebuah gudang penyimpanan di Seksyen 22 hari ini. ?–fotoBERNAMA (2021) HAK CIPTA TERPELIHARA
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

எஸ்.ஒ.பி. விதிகளை  மீறினால் கடும் நடவடிக்கை- தொழிற்சாலைகள், வணிக மையங்களுக்கு எச்சரிக்கை

ஷா ஆலம், ஜூலை 11– நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) மீறும் தொழிற்சலைகள் மற்றும் வணிக மையங்களுக்கு எதிராக வர்த்தகத்தை மூடுவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

எஸ்.ஒ.வி. விதிமுஐறகளை மீறும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக மையங்கள் விஷயத்தில் இனி ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்றும் அவர் எச்சரித்தார்.

நாம் கோவிட்-19 நோயை முடிவுக்கு கொண்டு வரும் வரை நாம் நடத்தவிருக்கும் போரின் ஒரு பகுதியாக இந்த கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தன்மூப்பாக செயல்படும் செயல்படும் தரப்பினர் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த இரு தினங்களில் எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய 108 தொழிற்சாலைகளை மூட உத்தரவிடப்பட்டதாக அவர் நேற்று கூறியிருந்தார்.


Pengarang :