ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

சுங்கை காண்டீஸ் தொகுதி ஏற்பாட்டில் சமையல் பொருள் விநியோகம் 

ஷா ஆலம், ஜூலை 16– வசதி குறைந்தவர்களுக்கு உதவும் நோக்கில் சுங்கை காண்டீஸ் தொகுதி அடிப்படை சமையல் பொருள் விநியோக மையத்தை உருவாக்கியுள்ளது. 

டாப்போர் ராக்யாட் எனும் இந்த திட்டத்தின் கீழ் தினசரி காலை 11.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை கிள்ளான், தாமான் ராக்யாட், டி‘ராக்கிட் உணவகம் அருகே இந்த சமையல் பொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாவி அகமது முக்னி கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட காலத்தில் சுங்கை காண்டீஸ் மக்களின் உதவுத் தேவையை நிறைவு செய்யும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

வசதி குறைந்த குடும்பத்தினர் இந்த மையத்திற்கு வந்து சமையல் பொருள்களை பெற்றுச் செல்லலாம். அனைவருக்கு சம அளவில் சமையல் பொருள் கிடைப்பதை உறுதி செய்ய அங்கு பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாமான் ஸ்ரீ அண்டாலாஸ், டி‘ராக்கிட் உணவக வளாகத்தில்  150 பேருக்கு சமையல் பொருள்களை நேற்று விநியோகம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இத்திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய அரசு சாரா அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள்  தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

 


Pengarang :