ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

நடமாட்ட கட்டுப்பாடு விதிகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மாநில அரசு மேற்கொண்ட பல்வேறு திட்டங்களில் மக்கள் பயனடைந்துள்ளனர்

ஷா ஆலம், 25 ஆக: ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட கித்தா சிலாங்கூர் 2.0 தொகுப்பில் உள்ள மூன்று இலக்குகள்  அடையப்பட்டதாக டத்தோ மந்திரி புசார்  கூறினார்.

ஹிஜ்ரா தொழில் முனைவோர் கடனுக்கான தவனையை நீடிப்பது, மக்கள் வீடமைப்பு திட்டம் என்னும் பிபிஆர் வீட்டுத் திட்டங்களில் வசிப்பவர்களுக்கு வாடகையை ஒத்திவைப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“சிலாங்கூர் அறக்கட்டளை உதவித்தொகை மாணவர் கடன் செலுத்துதலும் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள 23 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன, ”என்று இன்று சிலாங்கூர் மாநில சட்டசபை கூட்டத்தில் அவர் கூறினார்.

இதற்கிடையில், ஆகஸ்ட் 16 ஆம் தேதி நிலவரப்படி RM551.56 மில்லியனின் மொத்த மதிப்பிலான திட்டங்களின் வழி RM236.63 மில்லியன் செலவிடப்பட்டு மொத்தம் 496,800 தனிநபர்கள் அத்திட்டங்களின் வழி நன்மைகளைப் பெற்றதாக அவர் கூறினார்.

ஜூன் 9 அன்று, சிலாங்கூர் அரசாங்கம், நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவால் (PKP) பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மக்கள் ஒன்றுபட்டு  வெற்றியை நோக்கி என்ற புதிய திட்டத்தை அறிவித்தது.

இந்த திட்டம், 26 அம்சங்களை உள்ளடக்கியது, குறைந்த வருமானம் கொண்ட குழு, மாணவர்கள், சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் உட்பட குறைந்தது 1.6 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கவல்லது.

 


Pengarang :