ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 62.6 விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், ஆக 30- நாட்டிலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களில் 62.6 விழுக்காட்டினர் அதாவது 1 கோடியே 46 லட்சத்து 48 ஆயிரத்து 590 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

நேற்று வரை தடுப்பூசியை பெற்றவர்களின் எண்ணிக்கை இதுவாகும் என்று கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக்குழு கூறியது.

நாட்டு மக்களில் 1 கோடியே 93 லட்சத்து 89 ஆயிரத்து 392 பேர் அல்லது 82.8 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாகவும் அந்த பணிக்குழு தெரிவித்தது.

இதன் வழி தேசிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் (பிக்) வழி தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 27 ஆயிரத்து 548 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நேற்று நாடு முழுவதும் மொத்தம் 302,804 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 142,186 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 160,618 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.


Pengarang :