ECONOMYMEDIA STATEMENTPBT

பொது மக்கள் விளையாட்டு, பொழுதுபோக்கு நடவடிக்கைளுக்கு மண்டபங்களை பெறலாம்.

ஷா ஆலம், செப் 10- தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மண்டபங்களை விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு, இன்று தொடங்கி பொது மக்கள் வாடகைக்குப் பெற ஷா ஆலம் மாநகர் மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படும் என்று சமூக ஊடகங்கள் வாயிலாக மாநகர் மன்றம் பகிர்ந்து  கொண்ட பிரசுரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூப்பந்து, கைப்பந்து, செப்பாக் தக்ராவ், வலைப்பந்து, தேக்வாண்டோ, சீலாட் மற்றும் ஜூம்பா ஆகிய விளையாட்டுகளுக்கு  மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படும் என்றும் அது தெரிவித்தது.

குறைந்தது ஒரு மீட்டர் கூடல் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், விளையாட்டு நடவடிக்கைகளுக்கு முன்னரும் பின்னரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற நிபந்தனைகளும் பின்பற்றப்பட்ட வேண்டும் என விளையாட்டாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மண்டபங்களுக்கு வழங்கப்படும் அனுமதி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

காலை நேரத்திற்கான பிரிவு- காலை 8.00 முதல் 10.00 மணி வரை 10.00 முதல் 12.00 மணி வரை.

மாலை நேரத்திற்கான பிரிவு- நண்பகல் 12.00 முதல் மாலை 2.00 மணி வரை, மாலை 2.00 முதல் 4.00 வரை, மாலை 5.00 முதல் இரவு 7.00 வரை

இரவு நேரத்திற்கான பிரிவு- இரவு 7.00 முதல் 9.00 வரை


Pengarang :