ECONOMYMEDIA STATEMENTSELANGOR

நோய்த் தொற்று காலத்தில் 10,000 குடும்பங்களுக்கு புக்கிட் லஞ்சான் தொகுதி உதவி

பெட்டாலிங் ஜெயா, செப் 26- கோவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தால் பாதிக்கப்பட்ட புக்கிட் லஞ்சான் தொகுதியைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு கடந்தாண்டு முதல் உதவி வழங்கப்பட்டுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் உணவுக் கூடைகளும் சமைக்கப்பட்ட உணவுகளும் மிக அதிக அளவில் விநியோகிக்கப்பட்டதாக தொகுதி உறுப்பினர் எல்சபெத் வோங் கூறினார்.

அவ்விரு மாதங்களிலும் உணவுக்கான தேவை மிகவும் அதிகமாக இருந்தது. இக்காலக்கட்டத்தில் பலர் வேலை இழந்திருந்ததால் வாரம் ஒன்றுக்கு 500 உணவுப் பொட்டலங்களை வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன என்றார் அவர்.

உணவகங்களின் ஒத்துழைப்புடன் வாரந்தோறும் 400 பொட்டலங்கள் வரையிலான சமைத்த உணவுகளை இலவசமாக விநியோகம் செய்தோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்குள்ள டாமன்சாரா டாமாய் சமூக மண்டபத்தில் நடைபெற்ற புக்கிட் லஞ்சான் தொகுதி நிலையிலான நடமாடும் தடுப்பூசி இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கி பல்வேறு பொருளாதாரத் துறைகள் திறந்த விடப்பட்டதைத் தொடர்ந்து இந்த உணவுப் பொருள்களுக்கான தேவை 200 முதல் 100 பொட்டலங்களாக குறைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


Pengarang :