HEALTHMEDIA STATEMENTPBT

நெரிசலின்றி தடுப்பூசி பெற செல்வேக்ஸ் திட்டத்தில் வாய்ப்பு- பொதுமக்கள் கருத்து

பெட்டாலிங் ஜெயா, செப் 26-சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தை தாங்கள் தேர்ந்தெடுத்தற்கு தடுப்பூசி மையங்களில் அதிக கூட்ட நெரிசல் இல்லாமலிருப்பது முக்கிய காரணமாக விளங்குவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

இதன் காரணமாகவே தாம் தன் உறவினரை தடுப்பூசி பெறுவதற்கு இம்மையத்திற்கு அழைத்து வந்ததாக சூ சீ சியோங் என்ற ஆடவர் கூறினார்.

சென் ஃபா கியோங் (வயது 57) என்ற தன் உறவினருக்கு தடுப்பூசி பெற தடுப்பூசி மையம் ஒன்றில் தாம் முன்பதிவு செய்திருந்ததாகவும் எனினும் அவரது உடல் நிலை காரணமாக அந்த வாய்ப்பை தாங்கள் நிராகரித்து விட்டதாகவும் அவர் சொன்னார்.

கண் பார்வை இழந்தவரான அவர் கடுமையான நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த மையத்தில் காணப்பட்ட கூட்ட நெரிசல் அவருக்கு பாதுகாப்பானதாக இல்லை என அவர் தெரிவித்தார்.

ஆனால், இந்த மையம் நெரிசலின்றி காணப்படுவதால் என்  உறவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை எளிதாக மேற்கொள்ள முடிந்தது என்றார் அவர்.

இதனிடையே, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தடுப்பூசி பெற்று விட்ட நிலையில் தனது தாயாரான திருமதி சவரியம்மாள் அருளப்பன் (வயது 75) தமக்கும் அத்தகைய பாதுகாப்பு வேண்டும் என முடிவெடுத்ததாக அவரின் புதல்வி திரேசா முனியாண்டி (வயது 47) கூறினார்.

குடும்பத்தில் அனைவரும் தடுப்பூசி பெற்றுவிட்ட நிலையில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட எங்கள் தாயாருக்கும் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பளிக்க முடிவெடுத்தோம். 

குடும்பத்தினருடன் விவாதித்தப் பின்னர் இந்த தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி மையத்தில் எங்கள் தாயாருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அழைத்து வந்தோம் என்றார் அவர்.

டாமன்சாரா டாமாய் சமூக மண்டபத்தில் நடைபெற்ற நடமாடும் தடுப்பூசி இயக்கத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :