ECONOMYMEDIA STATEMENTPBT

மாநில எல்லை கடக்க அனுமதி – மூன்று வாரங்களில் முடிவெடுக்கப்படும்

ஜோகூர் பாரு, செப் 26- மாநில எல்லைகளைக் கடப்பதற்கு பொது மக்களை அனுமதிப்பது தொடர்பில் மூன்று வார காலத்தில் முடிவெடுக்கப்படும்.

நாட்டிலுள்ள பெரியவர்களில் 90 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றப் பின்னர் இதன் இவ்விவகாரம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் கூறினார்.

இதன் அடிப்படையில் பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் கூடிய விரைவில் எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பொதுமக்கள் தடுப்பூசியைப் பெறுவதன் மூலம் 90 விழுக்காட்டு இலக்கை அடைவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக சுகாதார அமைச்சு மலேசிய ஆயுதப்படையுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

உட்புற பகுதிகளில் கூடுதலான கள தடுப்பூசி மருத்துவ குழுக்களை களமிறக்குவது மற்றும் வாகனங்களில் இருந்தவாறு தடுப்பூசி பெற வகை செய்யும் டிரைவ் ட்ரூ திட்டத்தை அமல்படுத்துவது போன்ற உடனடி நடவடிக்கைகளை ஆயுதப்படை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாநில எல்லைகளை கடப்பது தொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும். சுகாதார அமைச்சுடன் கூட்டாக நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூன்று வார காலத்தில் பலனைத் தரும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

எல்லை கடப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளைக் (எஸ்.ஒ.பி.) வகுப்பது மற்றும் அமலாக்கப் பணிகளை மேற்கொள்ளும் துறைகளின் பொறுப்புகளை தீர்மானிப்பது தொடர்பில் முடிவெடுக்க வேண்டியுள்ளது


Pengarang :