ECONOMYMEDIA STATEMENTPBT

சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டிய இரு நிறுவனங்களுக்கு அபராதம்

ஷா ஆலம் செப் 28- சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டிய குற்றத்திற்காக திடக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இரு நிறுவனங்களுக்கு காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,900 வெள்ளி அபராதம் விதித்தது.

காஜாங் நகராண்மைக்கழகத்தின் 2007 ஆம் ஆண்டு குப்பை சேகரித்தல், அகற்றுதல் மற்றும் அழித்தல் துணைச் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் சரிக்காட் லோய் ஓன் சென். பெர்ஹாட் மற்றும் ஏ.ஆர். மெகா வின் சென். பெர்ஹாட் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது குற்றஞ்சாட்டப்பட்ட அவ்விரு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதாக காஜாங் நகராண்மைக் கழகத்தின் பொது உறவு அதிகாரி கமாருள் இஸ்லான் சுலைமான் கூறினார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி சரிக்காட் லோய் ஓன் சென்.பெர்ஹாட் நிறுவனத்திற்குச் சொந்தமான லோரி ஒன்று உலு லங்காட், கம்போங் புக்கிட் ராயா, பத்து 11இல் உள்ள லோட் 544 எனுமிடத்தில் குப்பைகளை சட்டவிரோதமாக கொட்டியதை நகராண்மைக் கழக அதிகாரிகள் கண்டு பிடித்தனர் என்று அவர் சொன்னார்.

அந்த லோரி உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டதோடு அதன் உரிமையாளருக்கு சம்மனும் வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி காஜாங், பாசீர் சுங்கை சுவா காலியிடத்தில் ஏ.ஆர். மெகா வின் சென்.பெர்ஹாட் நிறுவத்திற்கு சொந்தமான லோரி ஒன்று குப்பைகளை சட்டவிரோதமாக கொட்டியதை சித்தரிக்கும் காணொளி ஒன்றை நகராண்மைக்கழக உறுப்பினர் ஒருவர் தங்களுக்கு அனுப்பியதாக அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட அந்த லோரியும் பறிமுதல் செய்யப்பட்டதோடு அதன் உரிமையாளருக்கும் சம்மன் வழங்கப்பட்டது என அவர்


Pengarang :