ECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

12 வது மலேசியத் திட்டத்தில் அதிக பள்ளிகளை நிர்மாணிப்பீர்- மந்திரி புசார் வலியுறுத்து

ஷா ஆலம், செப் 30- பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தில் அதிகமான பள்ளிகளை நிர்மாணிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.

சிலாங்கூர்  மாநிலத்திலுள்ள நகரங்களில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

குறிப்பிட்ட சில இடங்களில் ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் வரை பயில்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

சிறந்த காற்றோட்ட வசதி அல்லது மாற்றமான சூழல் ( வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கை) ஒரு முக்கியமான அம்சம் என்பதை கோவிட்-19 நோய்த் தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது.  பள்ளிகளுக்கான தேவை அதிகம் உள்ளதால் மாநில அரசு பல இடங்களில் பள்ளிக்காக வழங்கிய நிலங்களில் மத்திய அரசு விரைவில் கட்டுமானப் பணியை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

குறிப்பாக, எல்மினா பகுதியில் பள்ளி நிர்மாணிப்புக்காக ஐந்து நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு பள்ளிகூட நிர்மாணிக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் சுபாங் பெஸ்தாரிக்கு செல்ல வேண்டிய நிலை உண்டாகி அங்கும் வகுப்புகளில் நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

12வது மலேசியத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்களை மாநில அரசு வரவேற்கும் வேளையில் மேலும் சில திட்டங்களை மறுஆய்வு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :