Pengerusi SPR Datuk Abdul Ghani Salleh (kiri) meninjau proses pengundian pada Pilihan Raya Kecil (PRK) Dewan Undangan Negeri (DUN) Slim di Sekolah Kebangsaan Aminuddin Baki, Tanjung Malim pada 29 Ogos 2020. Foto BERNAMA
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

விபரங்களை சரிபார்க்க 18 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு அக். 1 ஆம் தேதி முதல் தேதி வரை வாய்ப்பு

ஷா ஆலம்,  அக் 1- வாக்காளர் ஆகவிருக்கும் 18 வயதுக்கும் மேற்பட்ட இளையோர் அக்டோபர் மாதம் முதல் தேதி தொடங்கி தங்கள் விபரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

இயல்பாக வாக்காளராவதற்கான முன்பதிவை இரு வழிகளில் இம்மாதம் இறுதி வரை சரிபார்க்கலாம் என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் கூறினார்.

முதலாவது வழி, mysprsppa.spr.gov.my  என்ற அகப்பக்கத்தை பயன்படுத்தி தகவல் அறிவது அல்லது நாடு முழுவதும் உள்ள 594 சரிபார்க்கும் மையங்களுக்குச் சென்று தங்கள் நாடாளுமன்றத் தொகுதிக்கான கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வது ஆகிய வழிமுறைகளை பயன்படுத்தலாம் என அவர் சொன்னார்.

இயல்பாக வாக்காளராகும் முன்பதிவை சரிபார்ப்பதற்கான இந்த ஒரு மாத காலத்தில் வாக்காளர்கள் தங்கள் விபரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம. தவறுகள் ஏதும் இருப்பின் புகார் செய்யலாம். அதன் பிறகு  அவர்கள் இயல்பாகவே வாக்காளர்களாக ஆக்கப்படுவர் என்றார் அவர்.

அந்த முன்பதிவு முறையில் காட்டப்படும் அடையாளக் கார்டு முகவரியில் சம்பந்தப்பட்ட வாக்காளர் வசிக்காவிட்டால் அதனை இம்மாத இறுதிக்குள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேல் விபரங்களைப் பெற விரும்புவோர்  www.spr.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது 03-8892 7018 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். 


Pengarang :