Aliran trafik di pintu gerbang Kota Darul Ehsan sempadan antara Selangor dan Kuala Lumpur agak sibuk ketika tinjauan aliran trafik sekitar jam 11 pagi hingga 12 tengah hari pada 13 Oktober 2020. Foto: BERNAMA
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு சிலாங்கூர் மாறியது

ஷா ஆலம், அக் 1- சிலாங்கூர், கோலாலாலம்பூர், புத்ரா ஜெயா ஆகிய பகுதிகள் அக்டோபர் மாதம் முதல் தேதி தொடங்கி தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு மாறின.

மலேசிய சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் நடப்பு இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த மாற்றம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தேசிய மீட்சித் திட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் உள்ள மாநிலங்களில் எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறை ஒரு மாதிரியாக இருக்கும் என்றும் எனினும், சில தளர்வுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த மாதம் 29ஆம் தேதி கூறியிருந்தார்.

இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் விளையாட்டுப் போட்டிகளை காண அனுமதிக்கப்படுவார்கள் எனக்கூறிய அவர், எனினும் 18 வயதுக்கும் குறைவானவர்களுக்கு இத்தடை தொடர்ந்து நீடிக்கும் என்றார்.

உயர்கல்விக் கூடங்கள், தொழில்கல்வி மையங்கள் உள்ளிட்டவை அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

தேசிய மீட்சி நிலையின் மூன்றாம் கட்டத்திற்கு மலாக்காவும் மாறும் நிலையில் கெடா இரண்டாம் கட்டத்திற்கு மாற்றம் காண்கிறது.


Pengarang :