ECONOMYMEDIA STATEMENTPBT

வேலையில்லாதோர் எண்ணிக்கையை 4 விழுக்காட்டிற்கும் கீழ் குறைக்க சிலாங்கூர் இலக்கு

ஷா ஆலம், அக் 13– சிலாங்கூர் 2021 ம் ஆண்டு வேலை வாய்ப்புச் சந்தையின் மூலம்,   25,000 புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரப்படுவதை உறுதி செய்யும். அதை தொடர்ந்து சிலாகூரில் வேலையில்லாப் பிரச்சனை நான்கு விழுக்காட்டிற்கும் கீழ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டு வரை சிலாங்கூரில் பதிவான வேலையில்லாதோர் எண்ணிக்கை 4.4 விழுக்காடு அல்லது 165,000 பேராகும்  என்று இளம் தலைமுறையினர்  மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.

இந்த வேலையில்லாப் பிரச்னை காரணமாக தகவல் தொழில்நுட்பம், சேவை, நுட்ப மற்றும் நிபுணத்துவ துறைகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வேலையில்லாப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் மாநில அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த 25,000 வேலை வாய்ப்புகள் முழுமையாக நிரப்பப்படும் பட்சத்தில் மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கையை நான்கு விழுக்காட்டிற்கும் கீழ் கொண்டு வர முடியும் என நம்புகிறோம் என்றார் அவர்.

இந்த  வேலை வாய்ப்புச் சந்தையின் போது நடைபெறும் நேர்முகப் பேட்டிக்கு வேலை தேடுவோர் முறையாக வரவேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயமாகும். இங்கு அவர்கள் தங்களுக்கு பொருத்தமான வேலைகளை தேர்ந்தெடுக்க முடியும் என்று அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தின் ஜூப்ளி பேராக் மண்டபத்தில் வேலை வாய்ப்புச் சந்தையை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

 


Pengarang :