ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி பெறாத வணிகர்களுக்கு வர்த்தம் புரிவதில் சிக்கல்- அமைச்சர் எச்சரிக்கை

கோல சிலாங்கூர், அக் 20- கோவிட்-19 தடுப்பூசியைப் பெற மறுக்கும் வணிகர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்வதில் சிக்கலை எதிர்நோக்க வேண்டி வரும்.

மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான முக்கிய நிபந்தனையாக தடுப்பூசி விளங்குவதால்  இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நோ ஓமார் கூறினார்.

தடுப்பூசி பெறாத பட்சத்தில் அவர்களால் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும். இது அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்கும் என்றார் அவர்.

கோல சிலாங்கூர் சமயப்பள்ளியில் இளையோருக்கான தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தொழில்முனைவோர் தடுப்பூசி பெறுவதை அமைச்சு இதுவரை கட்டாயப்படுத்தவில்லை. எனினும்,  இவ்விவகாரம் எவ்வளவு கடுமையாக உள்ளது என்பதை கண்டறிந்தப் பின்னர் இதன் தொடர்பில் விவாதிக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :