ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

2022 பட்ஜெட் விவாத்தில் எதிர்க்கட்சியினரும் பங்கேற்பு- மந்திரி புசார் ஏற்பாடு

ஷா ஆலம், அக் 22- வரும் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களுடன் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இம்மாதம் 15 ஆம் தேதி கலந்துரையாடல் நடத்தினார்.

மாநில மக்களின் நலனுக்காக மேலும் ஆக்ககரமான முறையில் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் நோக்கில் இங்குள்ள கான்கார்ட் ஹோட்டலில் இச்சந்திப்பு நடத்தப்பட்டதாக அமிருடின் சொன்னார்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி மன்றம் சுயேச்சை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் குவாங் சட்டமன்ற உறுப்பினர்  சலாஹூடின் அமினுடின், சிஜங்காங் உறுப்பினர் டத்தோ டாக்டர் அகமது யூனுஸ் ஹைரி, தெராத்தாய் உறுப்பினர் லாய் வேய் சோங் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித்  தலைவர் முகமது ஜைம் தவ்பிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, இச்சந்திப்பு தொடர்பில் சலாவுடினை தொடர்பு கொண்ட போது, அடுத்த மாதம் 26 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்களில் சட்டவிரோத தொழிற்சாலைகள் விவகாரமும் முன்வைக்கப்பட்டதாக சொன்னார்.

சட்டவிரோத தொழிற்சாலைகள் விவகாரத்தைக் கையாள சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். இவ்விவகாரத்தில் நாம் ஊராட்சி மன்றங்களை மட்டுமே நம்பியிக்க முடியாது என்றார் அவர்.


Pengarang :