ECONOMYMEDIA STATEMENTPBT

இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்தை அதிவிரைவாக மேற்கொள்ளும் நாடுகளில் மலேசியாவுக்கு இடம்

கோலாலம்பூர், அக் 22- உலகில் அதிவிரைவாக இளையோருக்கான கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை மேற்கொள்ளும் நாடுகளில் மலேசியாவும் இடம் பெற்றுள்ளது.

இரண்டு மாதங்களுக்கும குறைவான காலக்கட்டத்தில் 12 முதல் 17 வயது வரையிலான 80 விழுக்காட்டு இளையோருக்கு குறைந்தது ஒரு டோஸ் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

இளையோருக்கு அதிவிரைவாக தடுப்பூசி செலுத்தும் நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது என்று தனது டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெற்றிக்காக துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி, துணைக் கல்வியமைச்சர் டாக்டர் மா ஹாங் சூன், இளையோருக்கான கோவிட்-19 தடுப்பூசிப் பணிக்குழு ஆகிய தரப்பினருக்கு அந்த பதிவில் கைரி  நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நேற்று வரை நாட்டில் 12 முதல் 17 வயது வரையிலான 13 லட்சத்து 67 ஆயிரத்து 216 இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இளையோருக்கான கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் கடந்த மாதம் 8 ஆம் தேதி தொடங்கியது முதல் 25 லட்சத்து 24 ஆயிரத்து 156 இளையோர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.


Pengarang :