ECONOMYMEDIA STATEMENTPBT

பந்திங் மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் உணவுக் கூடை விநியோகம்

பந்திங், அக் 27- கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுக் கூடை உதவித் திட்டத்தை பந்திங் சட்டமன்றத் தொகுதி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இவ்வாண்டு தொடங்கி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லாவ் வேங் சான் கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் திட்டங்கள் உணவுக் கூடைகளோடு மட்டும் நின்றுவிடாமல் பிள்ளைகள் கல்வி பயில்வதற்கான உபகரண விநியோகத்தையும் உள்ளடக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

வசதி குறைந்த மாணவர்களுக்கு புத்தகம், பென்சில், அடிக்கோல் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களை வழங்குவதற்காக தொகுதி சார்பில் இதுவரை மூவாயிரம் வெள்ளிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

முன்னதாக அவர், தமது தொகுதி சேவை மையத்தில் 77 பேருக்கு இலவச இணைய தரவு சேவைக்காக சிம் கார்டுகளை வழங்கினார். 

வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக தொகுதி மூலம் 50 க்கும் மேற்பட்டோருக்கு மடிக்கணினி மற்றும் கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன என்று அவர் மேலும் சொன்னார்.

 


Pengarang :