ECONOMYMEDIA STATEMENTPBT

குடும்ப வன்முறை புகார் தொலைபேசி சேவை நவம்பர் முதல் தேதி தொடங்கும்

ஷா ஆலம், அக் 27- சிலாங்கூரில் குடும்ப வன்முறை தொடர்பான புகார்களை செய்வதற்கான சிறப்பு தொலைபேசி சேவையை மாநில அரசு தொடக்கவுள்ளது. செலாமாட் எனப்படும் இந்த சேவை வரும் நவம்பர் மாதம் முதல் தேதி தொடங்கி செயல்படும்.

குடும்ப வன்முறை தொடர்பில் உதவி பெற விரும்புவோர்  24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த சேவையை மையத்தை 03-64195027 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று டபள்யு.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் மகளிர் செயலாக்க துறையின் தலைமை செயல் முறை அதிகாரி சித்தி கமாரியா அகமது சுக்பி கூறினார்.

குடும்ப வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பந்தப்பட்டத் தரப்பினரிடமிருந்து முறையாக உதவி கிடைப்பதற்கு முன்னர் அவசரகால அடிப்படையில் உதவி வழங்கும் தலமாக இந்த சேவை விளங்கும் என்று அவர் சொன்னார்.

இந்த தொலைபேசி சேவையை மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் தொடக்கி வைப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

குடும்ப வன்முறைளைச் சம்பவங்களைக் கையாளும் சிறப்பு தொலைபேசி சேவையை உருவாக்குவதற்கு மாநில அரசு ஒரு லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தார்.


Pengarang :