ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 2 கோடியே 22 லட்சம் பெரியவர்கள் தடுப்பூசி பெற்றனர்

கோலாலம்பூர், நவ 11 - நாட்டில் நேற்று வரை மொத்தம் 2 கோடியே 22 லட்சத்து 48 ஆயிரத்து 737 பேர் அல்லது பெரியவர்களில் 95 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 97.5 விழுக்காடு அல்லது 2 கோடியே 28 லட்சத்து 38 ஆயிரத்து 338 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அகப்பக்கமான கோவிட்நாவ் கூறியது.

நேற்று மொத்தம் 131,240 பேருக்கு  தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டன. அதில் 37,689 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக பெற்ற வேளையில் எஞ்சிய 7,650 பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது தவிர, மேலும் 85,901 பேருக்கு ஊக்கத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 

இதன் வழி  கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) கீழ் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 8 லட்சத்து 4 ஆயிரத்து 374 ஆக அதிகரித்துள்ளது.

12 முதல் 17 வயதுடைய இளையோரில்  24 லட்சத்து 42 ஆயிரத்து 373 பேர் அல்லது 77.6 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.  அதே நேரத்தில் 86.6 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 25 ஆயிரத்து 876 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

 நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 731,635 ஊக்கத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

Pengarang :