ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

காலரா நோயைத் தடுக்க சுத்தமான உணவகங்களைத் தேர்ந்தெடுங்கள்- பொது மக்களுக்கு அறிவுறுத்து

ஷா ஆலம், நவ 16- காலரா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக சுத்தமான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தர விதிகளை பின்பற்றும் உணவகங்களைத் தேர்ந்தெடுக்கும் படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உணவக நடத்துநர்கள் டைப்பாய்டு தடுப்பூசி செலுத்தியுள்ளனரா? என்பது உள்ளிட்ட அம்சங்களை கவனிப்பது வாடிக்கையாளர்களின் கடமையாகும் என்று பொது சுகாதார நிபுணர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி கூறினார்.

உணவக நடத்துநர்களை  புறக்கணிப்பது நமது நோக்கமல்ல. மாறாக விவேகமான முடிவை எடுப்பது பயனீட்டாளர்களின் கடமையாகும் என்றார் அவர்.

உணவக உரிமையாளர்களும் சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள தர விதிகளுக்கேற்ப சுத்தமான முறையில் உணவைத் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

காலரா நோயைத் தடுப்பது தொடர்பான தெளிவான விளக்கங்களை சுகாதார அமைச்சு வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் ஒரு காலரா சம்பவம் பதிவாகியுள்ளதை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நேற்று முன்தினம் தனது டிவிட்டர் பதிவின் வழி உறுதிப்படுத்தியிருந்தார்.

காலரா சம்பவங்களை அடையாளம் காணும் பட்சத்தில் அது குறித்து உடனடியாக மாவட்ட சுகாதார இலாகாவுக்கு மின்-தகவலளிப்பு முறையின் வாயிலாக 24 மணி நேரத்தில் தெரிவிக்கும்படி அனைத்து மருத்துவர்களையும் சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா வலியுறுத்தியிருந்தது.

 


Pengarang :