I
ECONOMYMEDIA STATEMENTPBT

சட்டவிரோத தொழிற்சாலை மீது எம்.பி.எச்.எஸ் நடவடிக்கை- மந்திரி புசார் பாராட்டு

ஷா ஆலம், நவ 16- செரெண்டா, சுங்கை சோவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுத்தமைக்காக உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்திற்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத தொழிற்சாலைகளுக்கு எதிரான நடவடிக்கையை ஊராட்சி மன்றங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் இந்த அமலாக்க நடவடிக்கைக்கு எனது பாராட்டுக்கள். சட்டவிரோத தொழிற்சாலைகளுக்கு எதிரான நடவடிக்கையை தொடருங்கள் என அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.

சட்டவிரோமாக செயல்பட்டு வந்த அந்த தொழிற்சாலைக்கு எதிராக உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் இம்மாதம் 9 ஆம் தேதி மேற்கொண்ட நடவடிக்கையில் 300,000 லட்சம் வெள்ளி மதிப்பிலான 56 அலுமினியக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டவிரோத தொழிற்சாலைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சிலாங்கூர் அரசு இவ்வாண்டு முதல் தீவிரப்படுத்தியுள்ளதாக அமிருடின் சொன்னார்.

சட்டவிரோத தொழிற்சாலைகளை துடைத்தொழிப்பதற்காக அத்தகைய கட்டுமானங்களை உடைப்பது மற்றும் அபாரதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

2007 ஆம் ஆண்டு வர்த்தக மற்றும் தொழிலியல் துணைச் சட்டத்தின்  3 மற்றும் 38 வது பிரிவின் கீழ் அந்த தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 


Pengarang :