ECONOMYMEDIA STATEMENTPBT

லஞ்சம் குறித்து அஞ்சாமல் புகார் கொடுங்கள்- எஸ்.பி.ஆர்.எம். வலியுறுத்து

ஷா ஆலம், நவ 16- லஞ்சம் தரப்படுவது குறித்து ஊழல் தடுப்பு ஆணையத்திடம் உடனடியாக புகார் செய்யும்படி அமலாக்க அதிகாரிகள் அல்லது தனிநபர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இத்தகையத் தகவல்களைத் தருவோருக்கு கணிசமான வெகுமதி வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர்  டத்தோ அலியாஸ் சலிம் கூறினார்.

தங்களிடம் லஞ்சம் வழங்கப்படுவது தொடர்பில் அமலாக்க அதிகாரிகள் எஸ்.பி.ஆர்.எம்.மிடம் புகார் அளிக்கலாம். சில சந்தர்ப்பங்களில் பலவீனமான உயர் நெறியைக் கொண்டிப்பவர்கள் லஞ்சத் தொகையை பெற்றுக் கொள்வதற்குரிய கட்டாயத்தில் உள்ளனர் என்றார் அவர்.

இங்குள்ள ஷா ஆலம் மாநகர் மன்றத் தலைமையத்தில் நடைபெற்ற உயர் நெறி தின நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஷா ஆலம் மாநகர் மன்ற ஊழியர்கள் இன்று எடுத்துக் கொண்ட ஊழலுக்கு எதிரான உறுதி மொழி வரவேற்கத்தக்க ஒன்று எனக் கூறிய அவர், இதன் மூலம் அரசு ஊழியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றார்.

 


Pengarang :